ஃப்பிரிட்ஜில் வைக்க கூடாத பொருட்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள் ..! உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமல்லவா !!

Tamil news vegetables should not keep in fridge

ஃப்பிரிட்ஜில் வைக்க கூடாத பொருட்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள் ..! உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமல்லவா !!

பொருட்களை நீண்ட நாள் பயன்படுத்த பதப்படுத்துவதற்கு கண்டுபிடிக்கப்பட்டது தான் ஃப்பிரிட்ஜ். காய்கறி பழங்கள் இனிப்பு வகைகள் என அனைத்தையும் ஃப்பிரிட்ஜ்குள் வைத்து விடுகிறோம்.

எந்த பொருட்களை வைக்க வேண்டும் அதை எத்தனை நாட்கள் வைக்க வேண்டும் என்று தெரியாமல் அந்த பொருட்களையும் கெடுத்து நம் உடல் நலனையும் கெடுத்து கொள்கிறோம்.

ஃப்பிரிட்ஜில் வைக்க கூடாதவை

  • வாழைப்பழம் – ஃப்பிரிட்ஜில் இருந்து வெளியாகும் வாயு வாழைப்பழத்தின் சத்தை கெடுத்து விடும்.
  • தக்காளி – அதிக குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையையும் குறைத்து விடும்.
  • வெங்காயம் – ஃப்பிரிட்ஜில் வைத்தால் சத்துகள் குறைந்து விடும். அதோடு அழுகிய நாற்றம் ஏற்படும்.
  • உருளைக்கிழங்கு – சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.
  • கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஃப்பிரிட்ஜில் வைத்தால் சத்துகள் குறையும். இவற்றின் தண்டு பகுதியை நீரில் மூழ்கி வைத்தாலே போதும் உலர்ந்து போகாமல் இருக்கும்.
  • தர்பூசணி, முலாம்பழம் – நீர் சத்து அதிகம் உள்ள பழங்கள் ஃப்பிரிட்ஜில் வைத்தால், அப்பழங்கள் அதன் நீர்த்தன்மையை இழந்து விடும்.

மேலும் நறுக்கிய காய்கறிகள் பழங்களை வைக்க கூடாது. ஏனென்றால் ஃப்பிரிட்ஜில் இருக்கும் வாயு பழங்களின் மீது படர்ந்து கிருமிகள் தாக்கும். இது உடல் நலத்திற்கு கேடு விலை விக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *