இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம் !

Tamil news india won gold medals in asia championship

இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம் !

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கம் வென்றுள்ளனர்.

அமித் பங்கள்

ஆடவருக்கான 52 கிலோ குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கள் தங்கப்பதக்கம் வென்றார். இவர் கடந்த மாதம் பிப்ரவரியில் பல்கேரியாவில் நடந்த ஸ்டிரான்ஜா நினைவுப் போட்டியிலும், சென்ற வருடம் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

Image result for குத்துச் சண்டை amith bangal

பூஜா ராணி

பெண்களுக்கான 85 கிலோ போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த பதக்கத்தை வென்ற முதல் இந்தியப்பெண் பூஜா ராணி என்பது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் 2012 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Image result for pooja rani

13 பதக்கங்கள்

ஆடவருக்கான குத்துச் சண்டை போட்டியில் தீபக் சிங் (49 கிலோ), அவிந்தர் சிங்(75 கிலோ), மற்றும் ஆஷிஷ் குமார் (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிகளில் இந்தியா 2 தங்கம், நான்கு வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என 13 பதக்கங்கள் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *