இந்தியாவில் மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தப்படும் குழந்தைகள் ..! ஆய்வின் அதிர்ச்சி தகவல் !!

Tamil news education latest news

இந்தியாவில் மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தப்படும் குழந்தைகள் ..! ஆய்வின் அதிர்ச்சி தகவல் !!

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் உணர்வை பள்ளி ஆசிரியர்களோ அல்லது பெற்றோர்களோ பகிர்ந்துகொள்ள தயாராக இல்லை.

பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் தங்களை அனாதைகளாக நினைத்து கொள்கின்றன. இந்தியாவில் இது போன்ற மன அழுத்தத்திற்க்கு 13% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அபாயத்தை உணர்ந்த சிபிஎஸ்இ வாரியம், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உணர்வை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், சில பள்ளிகளில் மட்டுமே கவுன்சிலிங் நடத்தினர்.

கவுன்சலிங் கொடுப்பவர்கள் குழந்தைகளின் உணர்வை புரிந்து கொண்டால் மட்டும் போதாது. உணர்வுகளை வெளிப்படுத்தவும் கவுன்சிலிங் கொடுப்பவர்கள் இருக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *