இந்த விஷயங்கள்ல நீங்க கவனமா இருந்தாலே போதும்… உங்க இமேஜ் ஆபீஸ்ல உயர்ந்திடும் !!

இந்த விஷயங்கள்ல நீங்க கவனமா இருந்தாலே போதும்… உங்க இமேஜ் ஆபீஸ்ல உயர்ந்திடும் !!
ஆபீஸ்ல உங்க இமேஜ் உயர, இதோ உங்களுக்கான ஆபீஸ் டிப்ஸ் ..!
- சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்வதால் எந்த பதற்றமும் இல்லாமல் உற்சாகத்துடன் வேலையை தொடங்க உதவும்.
- பணியிடத்தில் கை தொலைபேசியை அமைதியான அல்லது அதிர்வுறும் முறையில் வைப்பதால் யாருக்கும் இடையூறாக இருக்காது. அதோடு வேளையில் முழுமையான கவனத்துடன் குறித்த நேரத்தில் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
- ஒருவரின் அறைக்குள் நுழைவதற்கு முன்பு கதவை தட்டி அனுமதியுடன் உள்ளே சென்றால், மற்றவர்களை ஒப்பிடுகையில் உங்களுடைய நல்லொழுக்கம் உயரும்.
- சக ஊழியர்களை பற்றி குறை கூறுவது மற்றும் கேலி செய்வதால் நம்முடைய தரம் குறைத்துவிடும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் பேசுவதால் எல்லார் மனதிலும் உயர்ந்த இடத்தில் இருப்பீர்கள்.
- ஒருவரின் அலுவல் சார்ந்தவைகளை அவருடைய அனுமதியின்றி எடுப்பதோ, பார்ப்பதோ மற்றவர்க்கு நம்மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதை தவிர்ப்பதால் உங்களுக்கென்று ஒரு தனி மரியாதை கிடைக்கும்.
- மேலும், அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களையும், கோப்புகளையும் பிறரிடம் பகிர்வது நாம் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.