‘இறக்கையில் தான் இருக்கை’ வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விமானம் ..!

Tamil news holland new design aeroplane

‘இறக்கையில் தான் இருக்கை’ வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விமானம் ..!

ஆம்ஸ்டர்டாம்: ஹாலந்து நாட்டில் உள்ள டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள புதிய விமானம், 20% எரிபொருள் குறைவாக எடுத்து கொள்கிறது. மேலும் அதில் அதிகபட்சமாக 314 பேர் வரை பயணம் செய்யக்கூடியதாக உள்ளது.

புகழ்பெற்ற கிதார் இசைக்கருவியின் நினைவாக கிப்ஸன் ஃபிளையிங்-V எலெக்ட்ரிக் கிதார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் V வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வடிவமைப்பின் சிறப்பம்சங்கள் என்னவெனில், இதன் இறக்கைகளில் தான் பயணிகள் அமரும் இடம், எரிபொருள் டேங்க், சரக்கு வைக்குமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானத்திற்கு ஹாலந்து நாட்டின் விமான சேவை நிறுவனமான கே.எல்.எம் நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *