என் படத்தை பார்க்க வாங்க என தியேட்டர் வாசலில் கெஞ்சிக் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர் ..!

Tamil news Director RV Pandi promotes Engu Sendrai En Uyire

என் படத்தை பார்க்க வாங்க என தியேட்டர் வாசலில் கெஞ்சிக் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர் ..!

சென்னை: சிறு படங்களை தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ளாததால் ஒரு படத்தின் தயாரிப்பாளர் தியேட்டர் வாசலில் கெஞ்சிக் கெஞ்சிக் டிக்கெட் விற்ற அவலம் நடந்துள்ளது.

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் சிறு படங்களை கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஜீவா நடிப்பில் கீ இன்று வெளியானது. மேலும் எங்கு சென்றாய் என் உயிரே, உண்மையின் வெளிச்சம், வேதமானவள், காதல் முன்னேற்றக் கழகம், ஆகிய படங்களும் இன்று வெளியாகின.

எங்கு சென்றாய் என் உயிரே

இந்நிலையில் எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி. பாண்டி தானே டிக்கெட் வாங்கி அதை குறைந்த விலைக்கு தியேட்டர் வாசலில் மக்களிடம் கொடுத்து என் படத்தை பார்க்க வாங்க என்று ரசிகர்களை அழைத்துள்ளார் பாண்டி.

சிறு படங்களுக்கும் தயவு செய்து ஆதரவு கொடுங்கள் என்று பாண்டி ரசிகர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார். மேலும் படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் விலையுடன் 100 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் தியேட்டர் வாசலில் இப்படி கெஞ்சியதை பார்த்து ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

Image result for ஆர்.வி. பாண்டி director


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *