ஐடிபிஐ வங்கியை வாங்கிய மிக பழமையான காப்பீட்டு நிறுவனம் ..!

Tamil news IDBI bank

ஐடிபிஐ வங்கியை வாங்கிய மிக பழமையான காப்பீட்டு நிறுவனம் ..!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, ஐடிபிஐ வங்கியை வாங்கியுள்ளது.

ஐடிபிஐ வங்கி 18 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 1.5 கோடி பேர் வாடிக்கையாளர்களை கொண்டது. கடந்த ஆண்டில் 3600 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்தது.

இந்த நஷ்டத்திற்கு முக்கிய காரணம் 31 சதவீதமாக உயர்ந்துள்ள வாராக்கடன் ஆகும். இதனால் தன் பங்குகளை விற்க முன்வந்த ஐ.டி.பி.ஐ. வங்கியை வாங்குவதற்கான முயற்சிகளை எல்.ஐ.சி. நிறுவனம் மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்தது.

இந்நிலையில் மிக பழமையான காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, ஐடிபிஐ நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை வாங்கியுள்ளது.

Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *