‘ஒரு புறம் வெயில், மறு புறம் தண்ணீர் பற்றாக்குறை’ மழைக்காக ஏங்கும் மக்கள் .!

Tamil news weather report latest

‘ஒரு புறம் வெயில், மறு புறம் தண்ணீர் பற்றாக்குறை’ மழைக்காக ஏங்கும் மக்கள் .!

தமிழகம்: ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு புறம் வெயில் மறு புறம் தண்ணீர் பற்றாக்குறை என மக்கள் தவித்து வருகின்றனர். மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சில இடங்களில் மட்டும் மழை பெய்தாலும் கோடை மழை போதுமான அளவு பெய்யவில்லை. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம்‌ சிறிது மேகமூட்டத்துடன் கா‌ணப்படும், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *