கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது

கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது..

 

நாகப்பட்டினம்

கஜா புயலின் தாக்கத்தின் காரணமாக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலின்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதனால் உலக பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கே புதிதாக நிறுவப்பட்ட 40 அடி உயர ஏசுநாதர் சிலையின் இரு கை பக்கங்களும் கடுமையாக சேதம் அடைந்து உடைந்து விழுந்துள்ளன.

Velankanni church gets damage due to cyclone Gaja

தேவாலய கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஓடுகள் வேயப்பட்டிருந்தன. அவை, காற்றால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

Velankanni church gets damage due to cyclone Gaja

கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அலங்கார கட்டுமானம் இடிந்து விழுந்துள்ளது.

Velankanni church gets damage due to cyclone Gaja
தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் இந்த பாதிப்புகளை விரைந்து சீர்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *