கோடை காலத்தில் உடலை குளிர்ச்சி படுத்தக் அற்புதமான மில்க் ஷேக் !!

Tamil news red banana milk shake benefits and preparation

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சி படுத்தக் அற்புதமான மில்க் ஷேக் !!

உங்களுக்கு ஒரு அருமையான டிப்ஸ்

கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளுவென வைக்க சம்மர் ஸ்பெஷல் செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக்.

சத்துகள்

செவ்வாழையில் வைட்டமின் சி, நார் சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்ற சத்துக்கள் இருப்பதால் அனைத்து வயதினரும் பருகலாம்.

தேவையான பொருட்கள்:

  • செவ்வாழைப் பழம் – ஒன்று
  • சாக்கோ பவுடர் – ஒரு டீஸ்பூன்
  • பால் – ஒரு கப்
  • சர்க்கரை – 5 டீஸ்பூன்

செய்முறை:

பாலை நன்றாக காய்ச்சி ஆற விடவும். நன்கு கனிந்த ஒரு செவ்வாழை பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சர்க்கரை, சாக்கோ பவுடர் இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும்.

ஆற வைத்த பாலை அந்த கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். சுவையான செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *