விஷாலின் வழக்கு நாளை விசாரிப்பு ..!

Tamil news vishal in court

தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் வழக்கு !

தயாரிப்பாளர் சங்கத்திற்கான தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து விஷால் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சங்க கணக்கு விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், தயாரிப்பாளர் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை கவனிக்க மாவட்ட பதிவாளர் சேகரை தனி அதிகாரியாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

தனி அதிகாரி சேகரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

விஷால் தொடர்ந்த இந்த வழக்கை நாளை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *