சபரிமலை விவகாரம் … சூடான கேரளா !

சபரிமலை விவகாரம் … சூடான கேரளா !

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து இன்று கேரளாவில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

சபரிமலை கோவிலில் நேற்று இரண்டு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதில் பல இந்து அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

Related image

கேரளாவில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. பேருந்து இயக்கம் முடங்கியதால் மாநிலம் முழுவதும் மக்கள் தவித்து வருகின்றனர்.

சபரிமலை விவகாரத்திற்கு உடனடி தீர்வை கேரளா அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *