சர்வதேச அளவில் பல போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண் வீராங்கனை !

Tamil news indian cricket team

சர்வதேச அளவில் பல போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண் வீராங்கனை !

உலக அரங்கில் ஒரு நாள் போட்டியில் 200 வது முறை விளையாடிய முதல் பெண் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் கிரிக்கெட் மகளிர் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி இதுவரை 2 போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று 3 வது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து 44 ஓவா்களில் 149 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதல் பெண் வீராங்கனை

சர்வதேச அளவில் 200 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பங்கேற்றுள்ளாா். இதுவரை 263 போட்டிகளில் மிதாலி ராஜ் சுமார் 200 போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளாா். அதோடு இந்த போட்டிகளில் மிதாலி 7 சதங்கள் மற்றும் 51 அரை சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *