சென்னைக்கு மழை வருமா ! வராதா ?

Tamil news weather report today

சென்னைக்கு மழை வருமா ! வராதா ?

சென்னை: தமிழகம் முழுவதும் வெப்பம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். ஆனால், சில இடங்களில் அனல்காற்று வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

சென்னைக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழக வெதர்மேன் கூறியுள்ளார். வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னையின் பெயர் இடம் பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *