செவித் திறனை அதிகரிக்க உதவும் ஆரஞ்சு வண்ணக் காய்கறிகள் !

Tamil news healthy foods for hearing impairment

செவித் திறனை அதிகரிக்க உதவும் ஆரஞ்சு வண்ணக் காய்கறிகள் !

தினமும் உணவில் ஆரஞ்சு வண்ணக் காய்கறிகளை சேர்த்து கொள்வதால் செவித்திறன் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • வாரம் இரண்டு முறையாவது மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண்கள், மூளை, இதயம் ஆகியவை பயன்பெறுவதோடு செவித்திறன் குறைபாடு ஏற்படுவதையும் தடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • கேரட், குடைமிளகாய் போன்ற ஆரஞ்சு வண்ண காய்கறிகளில் இருக்கும் பீட்டா கரோட்டினை, வைட்டமின் ஏ வாக நமது உடல் எளிதில் மாற்றிவிடுகிறது.
  • இளம்வயதில் செவித்திறன் குறைபாடு ஏற்படுவதை வைட்டமின் ஏ சத்துகள் தடுக்கின்றன.
  • வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்த அவகோடா பழங்கள் செவித்திறனை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் செய்கின்றன.
  • பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என அனைத்து வண்ண குடைமிளகாய்களும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தவை. செவித்திறனை பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • ஒரு நாள் முழுவதும் நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் சி சத்தை, ஒரு பாதி குடைமிளகாயில் கிடைக்கிறது.
  • மேலும் இரைச்சலால் ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை தடுக்க பருப்பு வகைகள் மற்றும் தானியங்களில் உள்ள மெக்னீசிய சத்துக்கள் உதவுகிறது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
Related image
Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *