தங்கப்பதக்கம் பெற்ற திருச்சி வீராங்கனை ..!

Tamil news gomathi trichy gold medalist

தங்கப்பதக்கம் பெற்ற திருச்சி வீராங்கனை ..!

திருச்சி: திருச்சி வீராங்கனை கோமதி ஆசிய தடகள போட்டியில் வெற்றி பெற்றார்.

கத்தார் நாட்டில் தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில்
தமிழகத்தை சேர்ந்த கோமதி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

திருச்சி வீராங்கனை கோமதி

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கோமதியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முடிகண்டம் என்னும் குக்கிராமம் ஆகும். இவரது தந்தை மாரி முத்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். தாய் ராஜாத்தி, லதா, திலகா என்ற இரண்டு சகோதரிகளும், மற்றும் சுப்பிரமணி என்ற சகோதரரும் உள்ளனர்.

கோமதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாசரேத்தில் பள்ளி படிப்பை முடித்து, திருச்சி ஹோலிகிராஸ் மற்றும் சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரியில் உயர்கல்வி படிப்பை முடித்து. பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார்.

சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட கோமதி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார்.

தற்போது ஆசிய தடகள போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *