தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு கண்ட விவசாயி … செம ஐடியால !!

Tamil news agriculture

தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு கண்ட விவசாயி … செம ஐடியால !!

கமுதி: பண்ணைக்குட்டைகளில் தண்ணீரை சேகரித்து விவசாயம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.

கமுதி அருகே உள்ள செங்கோட்டைபட்டி, சாமிபட்டி, நெறிஞ்சிபட்டி, தோப்படைபட்டி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

சில ஆண்டுகளாகவே பருவமழை பெய்யாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் விவசாயிகள் போர்வெல்களில் கிடைக்கும் குறைவான தண்ணீரை பயன்படுத்தி பண்ணை குட்டைகளை பிளாஸ்டிக் பாய்களால் மூடி தண்ணீரை சேகரிக்கின்றனர். இவ்வாறு செய்வதினால், நிலம் தண்ணீரை உறிஞ்சுவது தடுக்கப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மிளகாய், மக்காச்சோளம், பருத்தி, தென்னை போன்றவற்றை அப்பகுதி மக்கள் விவசாயம் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *