தமிழக விவசாயிகள் கையில் மண்டை ஓடுகள்…! அதிர்ச்சி தரும் சோக கதைகள்….

தமிழக விவசாயிகள் கையில் மண்டை ஓடுகள்…! அதிர்ச்சி தரும் சோக கதைகள்…

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் கையில் மண்டை ஓடுகள் இருப்பதால், அது பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது . இந்த மண்டை ஓடுகளுக்கு பல சோக கதைகள் இருக்கிறது.

7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி, 29 மாநில விவசாயிகள் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று கொண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மண்டை ஓடுகள்

தமிழக விவசாயிகள் பலர் மண்டை ஓடுகளை கையில் வைத்தும், சிலர் கழுத்தில் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை வைத்து மாலை அணிந்து போராடி வருகின்றனர்.

வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தங்கள் சக விவசாயிகளின் மண்டை ஓடுகளைத் தான் போராடும் விவசாயிகள் வைத்து இருக்கின்றன.

கண்ணீர்

மண்டை ஓடுகளை வைத்திருக்கும் சிலர் கண்ணீர் விட்டபடி இருந்தனர். இவர்களில் பலர் டெல்டா மாவட்ட விவசாயிகள். இந்த கதையை கேட்ட வெளிமாநில விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேச விவசாயிகளும் தங்கள் வீட்டில் இறந்து போன விவசாயிகளின் புகைப்படங்களை வைத்து போராட்டம் நடத்தினர். அவர்கள் இறந்தவர்களின் புகைப்படங்களை கொண்டு போராட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *