தித்திக்கும் வாழைப்பழ பாயசம் !!

Tamil news delicious banana receipe

தித்திக்கும் வாழைப்பழ பாயசம் !!

சுவையான வாழைப்பழ பாயசம் செய்வது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • வாழைப்பழம் – 1
 • பாசிப்பருப்பு – 1 கப்
 • தேங்காய் பால் – 2 கப்
 • ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
 • வெல்லம் – 3/4 கப்
 • நெய் – 2 டீஸ்பூன்
 • முந்திரி திராட்சை – தேவைக்கேற்ப

செய்முறை

 • பாசிப்பருப்பை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.
 • வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் வடிகட்டி கொள்ளவும்.
 • பாசிப்பருப்பை வெல்லத்துடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 • வாழைப்பழ துண்டுகளை நெய்யில் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
 • பின் வேக வைத்த பாசிப்பருப்புடன் வதக்கிய வாழைப்பழம், தேங்காய் பால் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
 • இறுதியில் ஏலக்காய், திராட்சை, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.

சுவையான வாழைப்பழ பாயசம் தயார்.

Image result for banana payasam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *