‘தேங்காய் பிஷ் பிரை’ வித்தியாசமான சுவை .. ட்ரை பண்ணலாமா !

‘தேங்காய் பிஷ் பிரை’ வித்தியாசமான சுவை .. ட்ரை பண்ணலாமா !
மசாலா கலவை தடவிய மீன் வறுவல் சாப்பிட்டுருப்போம். இப்போ வித்தியாசமான சுவையில் மீன் வறுவல் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- வஞ்சிர மீன் – அரை கிலோ,
- எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
- சோளமாவு – 4 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 3
- எலுமிச்சை பழம் – 1
- பூண்டு விழுது – அரை ஸ்பூன்
- இஞ்சி – சிறிய துண்டு
- மிளகு பொடி – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- தேங்காய் துருவல் – தேவையான அளவு
- மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்.
செய்முறை:
- கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அந்த விழுதோடு எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், பூண்டு விழுது, மிளகு தூள் மற்றும் சோளமாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
- இந்த மசாலாவில் மீனை பிரட்டி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் அதனை தேங்காய் துருவலில் பிரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மீனை வறுத்து எடுக்கவும்.
வித்தியாசமான சுவையில் தேங்காய் பிஷ் பிரை தயார்.


