நடுக்கடலில் நின்ற 700 டன் எடை கப்பலை கரைக்கு இழுத்து வந்த கஜா புயல்

காரைக்கால்: நடுக்கடலில் நின்ற 700 டன் எடை கொண்ட கப்பலை கரைக்கு இழுத்து வந்த கஜா!

கடந்த ஒருவாரமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பீதியை ஏற்படுத்தி வந்த கஜா புயல் நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணிக்கு கரையை கடந்தது. அப்போது வேதாரண்யம், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

காரைக்கால்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு ஒரு தனியார் கப்பல் தூர்வாரும் பணிக்காக வந்தது. அந்த கப்பலில் கேப்டன் உள்பட 7 ஊழியர்களும் பணியில் இருந்தனர்.

காரைக்கால்

துறைமுகப் பகுதியில் தூர்வாரும் பணிகளை முடித்துக் கொண்டு அந்த கப்பல் 15 நாட்களுக்கு முன்பாகவே காரைக்காலில் இருந்து புறப்பட்டு சென்றது. அடுத்த சில பணிகளுக்காக காரைக்கால் அருகே நடுக்கடலில் கப்பலை நிறுத்தி வைத்திருந்தனர்.

Image result for ship caught in storm image

நள்ளிரவு சம்பவம்

நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மும்பை கப்பலை, கரையை நோக்கி இழுத்து வந்தது கஜா. அதில் இருந்த ஊழியர்கள் கப்பலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் புயலின் வேகம் காரணமாக, கப்பல் இழுத்து செல்லப்பட்டதால் ஊழியர்கள் பீதி அடைந்தனர்.

Related image
ஒரு வழியாக அந்த கப்பல் காரைக்கால் அருகே மேலவாஞ்சூர் கடற்கரையில் நின்றது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *