‘நல்ல நண்பனை இழந்து விட்டோம்’ மீளா துயரத்தில் திரையுலகம்..!

‘நல்ல நண்பனை இழந்து விட்டோம்’ மீளா துயரத்தில் திரையுலகம்..!

நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே. ரித்தீஷ் காலமானார்.

இலங்கையில் 1973 ஆம் ஆண்டு பிறந்த ஜே.கே. ரித்தீஷ் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

சின்ன புள்ள படத்தில் அறிமுகமான ஜே.கே. ரித்தீஷ் பெண் சிங்கம், கானல் நீர், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் 2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கம் போன்றவற்றில் முனைப்புடன் செயல்பட்டவரை இழந்து விட்டோம் என்று நடிகர் விஜய் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நல்ல தம்பியை நான் இழந்து விட்டேன் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலகம் முழுவதும் மீளா துயரத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *