நாங்கள் கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா …! விவசாயிகளின் கூக்குரல்!

நாங்கள் கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா …! விவசாயிகளின் கூக்குரல்!

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் அரசுக்கு குவியும் மணி ஆர்டர்கள்.

உலகில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்துக்கும் விலை நிர்ணயிப்பவன் பொருளை தயாரிப்பவன் தான். ஆனால்  நமக்காக நிலத்தில் கோமணம் கட்டிக்கொண்டு வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிக்கு மட்டும் ஏசி அறையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்தபடி அரசு நிர்ணயிக்கும். 

Related image

2௦௦௦ கோடி செலவில் தீவில் சிலை வைப்பார்கள் ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யமாட்டார்கள்.

குவியும் மணி ஆர்டர்

அண்மையில் 750 கிலோ வெங்காயத்தை கடுமையாக பேரம் பேசி கிலோவுக்கு 1.41 ரூபாய்க்கு விற்று அதில் கிடைத்த மொத்த தொகையான 1,064 ரூபாயை பிரதமருக்கு மணி ஆர்டர் செய்தார் சஞ்ஜெய் சாத்தேவை.

Image result for money order images

அதை தொடர்ந்து தற்போது ஸ்ரேயாஸ் அபேல் என்கிற விவசாயி தன் 2,657 கிலோ வெங்காயத்தை கிலோவுக்கு 1.60 ரூபாய்க்கு
விற்று மொத்த தொகையான 2,916 ரூபாயில் ஏற்று இறக்கு கூலி போக வீட்டுக்கு கொண்டு சென்றது ரூ.6 .

வெங்காய உற்பத்திக்கு 2 லட்சம் செலவு செய்தேன் எனக்கு கிடைத்த இந்த 6 ரூபாயில் ஒன்றும் செய்ய இயலாது. வாங்கிய கடனை எப்படி அடைப்பேன் என்று கதருக்கிறார் அபேல். அந்த 6 ரூபாயையும் டிசம்பர் 07, 2018 அன்று மகாராஷ்டிர முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், நெவாசா என்கிற பகுதியில் ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த வெங்காயத்தை மக்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். அதோடு ‘வெங்காய விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஒரு பலகையில் எழுதி வைத்துள்ளார்.

Related image

 கதறல்

கடந்த நான்கு வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் எங்களுக்கு சரியான விலை கிடைத்தது. இப்படி கிடைத்தால் நாங்கள் எப்படி வாழ்வது எங்கள் குழந்தைகள் எப்படி படிப்பது. 

நாங்கள் வாங்கிய கடனை நாங்களே கெளரவமாக அடைக்க முடியாமல் எப்போது அரசு எங்கள் கடனை தள்ளுபடி செய்யும் என்று பிச்சைக்காரர் போல் காத்திருக்கிறோம் என்று கண்ணீர் விட்டு கதறுகின்றனர் விவசாயிகள்.

Related image

கடைசி ஆயுதம்    

விலை சரிவு, கடன் தொல்லை என இவற்றை சமாளிக்க முடியாமல் கடைசி ஆயுதமா ஒவ்வொரு விவசாயிகளும் எடுக்கும் முடிவு தற்கொலை.

Related image

அரசு ?

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அதுவும் வித விதமாக சாப்பிட முடியும்.

Related image

எங்கள் வலியை உணர்விர்களா எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என்று உரக்க கத்திவிட்டு உயிரை மாய்த்து கொள்ளும் விவசாயிகளுக்கு நாம்(அரசு) என்ன செய்ய போகிறோம்(போகிறது).

நமக்காக தன் வயிற்றை காய போட்டு நம் வயிற்றை நிரப்பும் விவசாயிக்கு நாம் என்ன செய்தோம். “நாம்” தான் “அரசு” நம்மால் உருவாக்கப்பட்டது தான் அரசு.

நமக்கு சோறு போட்ட விவசாயிகளின் தற்கொலை கணக்கை மட்டும் வைத்து கொள்ள போகிறோமா?

இது ஒரு தனி மனிதனின் பிரச்சனை அல்ல ஒட்டு மொத்த தமிழர்களின் பிரச்சனை!! சிந்தித்து செயலாற்றுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *