நூலிழையில் தப்பிய சென்னை… அதி தீவிர புயலாக மாறிய ஃபானி !

Tamil news fani in odisa latest

நூலிழையில் தப்பிய சென்னை… அதி தீவிர புயலாக மாறிய ஃபானி !

ஒடிசா: ஃபானி புயல் ஒடிசாவில் இன்று காலை 8 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கி 11 மணிக்குக் கரையைக் கடந்தது.

ஃபானி புயலின் கண் பகுதி கரையைக் கடந்த போது, மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. தற்போது அதே வேகத்தில் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால், கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

இதனால் மரங்களும், மின்கம்பங்களும் விழுந்தன. மேலும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் கருணை

மிக சிறிய காலநிலை மாற்றத்தால் பெரிய பேரழிவில் இருந்து சென்னை தப்பித்து உள்ளது. இந்த புயல் சென்னையை தாக்கி இருந்தால் வரலாற்றில் இல்லாத மோசமான பேரிடராக மாறி இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மீட்புப் பணிகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளில் இருந்து 11 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் இருந்து மட்டுமே 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஃபானி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலவச தொலைபேசி எண் 1938 அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *