பட்டமளிப்பு விழாவில் சில வினாடிகளில் மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம் ..!

Tamil news america students graduation

பட்டமளிப்பு விழாவில் சில வினாடிகளில் மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம் ..!

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்வியாளர்கள், மூத்த பேராசியர்கள் என பலர் கலந்துக் கொண்ட இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் கலந்துக் கொண்டார்.

ராபர்ட் ஸ்மித்

பட்டம் பெற வந்த 400 மாணவர்கள், தங்களுக்காக ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று தெரியாமல் ராபர்ட் ஸ்மித் மேடையில் உரையாற்றுவதை கேட்டு கொண்டு இருந்தனர். அப்பொழுது ஸ்மித், ‘பட்டம் பெற்ற 400 மாணவர்களின் கல்வி கடன்களை நான் செலுத்துகிறேன்’ என்று கூறினார்.

அடுத்த நொடி அரங்கமே அதிர பெற்றோரும், மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கல்வி கடனின் மொத்த மதிப்பு 40 மில்லியன் டாலர் (ரூ.278 கோடி) ஆகும். ஏற்கனவே ஸ்மித், இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர் (ரூ.10 கோடி) உதவித்தொகையும் அறிவித்துள்ளார்.

கல்லூரியின் செய்தித்தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், இந்த பரிசு கல்லூரி வரலாற்றிலேயே ஒரு மிகச் சிறந்த நிகழ்வாகும். இதற்காக எங்கள் கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *