பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் ..!போராட்டத்திற்கான எச்சரிக்கை !

Tamil news farmers against hydro carbon project

பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் ..!போராட்டத்திற்கான எச்சரிக்கை !

தஞ்சை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஜூன் 1 ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசின் துணையுடன் மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 44 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை துவங்கினால் காவிரி பாசன பகுதி அழிந்து விளைச்சல் குறைந்து உணவு தட்டுப்பாடு ஏற்படும். காவிரி பாசனப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும்.

மேலும் ஜூன் 1ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மக்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு வரும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி திறக்க வேண்டும். இதற்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் துரை.மாணிக்கம் பேட்டியளித்துள்ளார்.

Related image
Related image


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *