மக்களே காஸ் சிலிண்டர் விலை குறைஞ்சிடுச்சு….!!!

மக்களே காஸ் சிலிண்டர் விலை குறைஞ்சிடுச்சு….!!!

புதுடில்லிஇந்திய ஆயில் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

விலை உயர்வு

ஜூலை முதல் நேற்று வரை எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 16.21 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி வரி வகை உயர்வு காரணமாக சிலிண்டர் விலை ரூ.2.94 உயர்ந்தது. அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ரூ. 2 உயர்ந்தது.

தற்போது விலை குறைந்தது

முதல்முறையாக, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 6.52 குறைத்தும், மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ. 133 குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மும்பையில் ரூ.505.05 , டில்லியில் ரூ.507.42 , கொல்கத்தாவில் ரூ.510.70 , சென்னையில் ரூ.507 ரூபாயாகவும் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய அரசு

மத்திய அரசு ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு ஒன்று வீதம் ஆண்டுக்கு 14.2 கிலோ சிலிண்டர்கள் 12 ஐ மானிய விலையில் அளிக்கிறது. மானியத் தொகையை நேரடியாகவே பயனாளர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பயனாளர் விரும்பினால் மானியத்தை தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கலாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Image result for gas cylinder images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *