ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் : டெலிகாம் சேவை துண்டிக்கப்படும்… அதிர்ச்சியில் மக்கள் ..!

ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் : டெலிகாம் சேவை துண்டிக்கப்படும்… அதிர்ச்சியில் மக்கள் ..!

மாதந்தோறும் ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் டெலிகாம் சேவை நிறுத்தப்படும் என்ற செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் :

பட்டன் போன், ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் தேவைக்கேற்ப ரீசார்ஜ்  கடைகளில் ரூ. 10, 20, 30 என ரீசார்ஜ் செய்துக் கொள்வார்கள். சிலர் ஆன்லைனில் செய்து கொள்வர்.

 

 

ஆனால் ப்ரீபெய்ர் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்தால், அவர்களின் இன்கமிங் சேவை நிறுத்தப்படும் என்று ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தன.

 

இந்த அறிவிப்பு தொடர்பாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வாடிக்கையாளர்களின் புகார்கள் குவிந்தன.

விசாரணை

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியது. பின், மினிமம் ரீசார்ஜ் திட்டத்துக்கு தடையும் விதித்தது.

டிராய் தலைவர்

நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களில் டிராய் தலையிடுவது கிடையாது. ஆனால்,  மினிமம் ரீசார்ஜ் என்று கூறி வாடிக்கையாளர்களின் சேவையை தடை செய்யக்கூடாது. மேலும், சேவை நிறுத்தம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா கூறியுள்ளார்.

விளக்கம்

சமீப காலமாக தங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தைச் சமாளிக்க  இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக டெலிகாம் நிறுவனங்கள் விளக்கம் அளித்தன.

இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி ரீசார்ஜ் கடைகளில் 35 ரூபாய்க்கு கீழ் ரீசார்ஜ் சேவைகள் செய்யப்படுவதில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *