‘வற்புறுத்தக் கூடாது’ பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் ..!

Tamil news education news

‘வற்புறுத்தக் கூடாது’ பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் ..!

சென்னை: புத்தகப் பைகளை வாங்கும் படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என்று பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாடப் புத்தகங்களுக்கு ரூ.5,000 மற்றும் சீருடை, லஞ்ச் பை ஆகியவற்றுக்கு ரூ.5,000 கேட்பதாக ஹேமலதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணி போன்றவற்றை பள்ளி நிர்வாகம் விற்பனை செய்யலாம். ஆனால், லஞ்ச் பை, ஸ்கூல் பை போன்றவற்றை வாங்குவதற்கு பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.

மேலும் ஹேமலதா தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *