விஷால் வழக்கு – அரசுக்கு நோட்டீஸ் !

Tamil news vishal case

விஷால் வழக்கு – அரசுக்கு நோட்டீஸ் !

தயாரிப்பாளர் சங்கத்திற்கான தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை கவனிக்க தனி அதிகாரியாக மாவட்ட பதிவாளர் சேகரை தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஒரு புகாரின் அடிப்படையில் சேகரை நியமித்தது சட்ட விரோதம். சேகரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசு, சங்கத்தில் பிரச்சனை முடிவுக்கு வந்தால் நிர்வாகத்தை சங்கத்திடம் தர தயார் என்று பதிலளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *