வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் டிவிட் !

Tamil news Harbhajan singh tweet

வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் டிவிட் !

சென்னை: தமிழக மக்கள் மற்றும் ஐபிஎல் சென்னை ரசிகர்கள் அனைவரும் நன்றி தெரிவித்து ‘கண்கள் கலங்க விடைபெறுகிறேன்’ என டிவிட் செய்துள்ளார் சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங்.

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக மக்கள் மற்றும் சென்னை ரசிகர்களுக்கு ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், தங்கள் இல்லங்களில் ஒருவன் போல, அன்பு செலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது. அடுத்த வருடம் #CSK வுக்கு விளையாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *