100 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் ..! எங்கே தெரியுமா ?

Tamil news tirupati temple latest news

100 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் ..! எங்கே தெரியுமா ?

திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் அலிபிரி பேருந்து நிலையம், பாலாஜி, ஏடுகொண்டலு, சென்ட்ரல், லீலா மகால் சர்க்கிள், கபிலேஸ்வரசாமி கோவிலை அடுத்த நந்தி சர்க்கிள் அருகில் உள்ள பேருந்து நிலையம் என 6 இடங்களில் பேருந்து நிலையம் உள்ளது.

நாளுக்கு நாள் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அனைத்து பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

100 கோடி

இதனால் திருப்பதியில் மேலும் ஒரு பேருந்து நிலையத்தை அமைக்க பாலாஜி பால் பண்ணை அருகே 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது ஆந்திர மாநில அரசு.

அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் சென்னை மாதாவரத்தில் உள்ள பேருந்து நிலையத்தைப் போல் அதிநவீன வசதியுடன், அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *