17 வது முறையாக வாக்களித்த இந்தியாவின் முதல் வாக்காளர் ..!

Tamil news first citizen of india

17 வது முறையாக வாக்களித்த இந்தியாவின் முதல் வாக்காளர் ..!

இந்தியாவின் முதல் வாக்காளர் நேற்று 17 வது முறையாக வாக்களித்துள்ளார்.

இமாசல பிரதேசத்தில் ஜூலை மாதம் 1 ஆம் தேதி 1917 ஆம் வருடம் பிறந்த சியாம் சரண் நேகி என்பவர் கினவுர் தொகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்திய நாட்டின் குடியரசுக்கு பின் 1951 ஆம் வருடம் முதல் மக்களவை தேர்தல் நடந்தது.

முதல் வாக்காளர்

கினவுர் தொகுதி சின்னி என்னும் பெயரில் இருந்தது. இந்த தொகுதி வாக்காளரான சியாம் சரண் நேகி இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை பெற்றார்.

பள்ளி ஆசிரியராக பணி புரிந்த சியாம் அதே தொகுதியில் வாக்குச்சாவடி பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். முதல் முதலாக அன்று அவர் தனது வாக்கை அளித்தார்.

அன்று முதல் இது வரை சியாம் தொடர்ந்து 16 மக்களவை தேர்தல் 13 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இரு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

நேற்று நடந்த இறுதிக்கட்ட மக்களவை தேர்தலின் வாக்களிப்பின் போது, தனது 102 ஆம் வயதில் சியாம் வாக்களித்துள்ளார். அவரை கனவுர் தொகுதி தேர்தல் அதிகாரி நேரில் சென்று வரவேற்று வாக்களிக்க வைத்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *